Biography of Sir Edmund Hillary - எட்மண்ட் ஹில்லரி வாழ்க்கை வரலாறு

'இமாலய சாதனை' என்ற சொற்றொடரை கேள்பிப்பட்டிருப்பீர்கள். இமயத்தைத் தொடுவதற்கு நிகரான ஒரு சாதனை என்பதுதான் அதன் பொருள். இந்த சொற்றொடர் 1953-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் நடைமுறைக்கு வந்தது. ஏனெனில் அந்த ஆண்டில்தான் உலகிலேயே ஆக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்டு சாதனை படைத்தான் மனிதன். தனிமனித முயற்சிகளிலேயே ஆக சிரமமானது இமயத்தைத் தொடுவதுதான் என்பது 1953-ஆம் ஆண்டுக்கு முன்னும் உண்மையாக இருந்தது. இப்போதும் உண்மையாக இருக்கிறது. அந்த சிகரத்தை முதன் முதலாக தொட்டு மனுகுல முயற்சிகளின் எல்லைகளை அகலப்படுத்திய அந்த அபூர்வ மனிதன் எட்மண்ட் ஹில்லரி.