"திருமணம் ஆகாத ஆணுக்கும் பெண்ணுக்கும் மகளாக பிறந்தவள் நான், அதனால் பாட்டி வீட்டில் வளர்ந்தேன். சிறிய வயதில் தாய் தந்தையரின் அன்புக்கு ஏங்கிய எனது சுட்டித்தனத்தை பொறுக்க முடியாமல் என் பாட்டி என் அம்மா வீட்டுக்கு துரத்தி விட்டார். நான் அங்கு வந்தது பிடிக்காத என் தாய் என்னை வெறுத்தார். அந்தக்கால கட்டத்தில் என் தாயின் உறவினர் சிலர் சிறுமி என்று கூட பாராமல் என்னை கதற கதற கற்பழித்தனர். பதினான்காவது வயதிலேயே கர்ப்பமாகி குழந்தையும் பெற்றேன். குறை பிரசவத்தில் பிறந்த அந்தக் குழந்தை சில நாட்களிலேயே இறந்து போனது. எவருடைய மடியிலாவது முகம் புதைத்து வலி தீரும் வரை அழ வேண்டும் போல இருந்தது" பிரபலத்தின் உச்சியில் இருந்த ஒரு பெண் தன் கெளரவம் பாதிக்கப்படுமே என்று கொஞ்சமும் அஞ்சாமல் மில்லியன் கணக்கானோர் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில்