உணவில் இரண்டு வகை உண்டு சைவம், அசைவம். சைவ உணவை விரும்பி உண்பவர்கள் அசைவத்தை வெறுப்பதற்கு கூறும் முக்கிய காரணம் உயிருள்ள விலங்குகளைக் கொன்று அவற்றை புசிப்பது பாவம் என்பதுதான். அந்தக்கூற்றுக்குப் பின்னனியில் இலைமறைக் காயாக இருக்கும் ஒரு நம்பிக்கை தாவரங்களுக்கு உயிர் இல்லை என்பதாகும் அப்படித்தான் உலகம் நம்பியிருந்தது பல்லாண்டுகளாக, 19 நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு விஞ்ஞானி அந்த நம்பிக்கையை பொய்யாக்கி அனைத்துவகை தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது என்பதை நிரூபித்துக்காட்டி உலகின் புருவங்களை உயர்த்தினார். தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்றால் அவற்றை உண்பதும் பாவமா? என்ற சர்ச்சைக்கெல்லாம் நாம் போக வேண்டாம். அப்படிப்பட்ட நுணுக்கமான உண்மையை ஆராய்ந்து சொன்ன அந்த விஞ்ஞானிக்கு வானம் வசப்பட்ட கதையைத் தெரிந்துகொள்வோம். அவர்தான் இந்தியாவின் உலகப்புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவரான 'சர்' ஜகதீஷ் சந்திரபோஸ் மேலும் தெரிந்து கொள்ள