உலக வரலாறு குறித்து வைக்கப்படத் தொடங்கியக் காலத்திலிருந்து எத்தனையோ மாமன்னர்களையும், வீர அரசர்களையும் சந்தித்திருக்கிறது சரித்திரம். பெரும்பாலான மன்னர்கள் பிற தேசங்களை கைப்பற்றியதால் வரலாற்றை வசமாக்கினர். வேறு சிலர் கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரலாற்றில் இடம் பிடித்தனர். இன்னும் சிலர் அரச வம்சத்தில் பிறந்தோம் என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு அரசாண்டு முடித்தனர். இப்படி எல்லா மன்னர்களையும் அவர்கள் மனுகுலத்திற்கு ஆற்றிய சேவைகள் மற்றும் வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை அளவுகோலாகக் கொண்டு வரிசைப்படுத்தினால் ஒருவர் முதல் நிலையை பிடிக்கக்கூடும். உலக வரலாற்றில் ஆயிரமாயிரம் மன்னர்கள் தங்களை தாங்களே மாட்சிமைப் பொருந்திய என்றும், கம்பீரம் நிறைந்த என்றும், மாமன்னன் என்றும் அழைத்துக்கொண்டனர். அவர்கள் அனைவருமே ஒரு குறிப்பிட்ட காலத்தில் மின்னி மறைந்தனர். ஆனால் ஒருவர் மட்டும் வரலாறு நிலைக்கும் வரை மின்னுவார். என்று கூறுகிறார் ஹெச்.டி.வெல்ஸ் (H.T.WELLS), ஓர் ஆங்கில இலக்கிய மேதை போற்றிய அந்த இந்திய மன்னனின் பெயர் அசோகர் மேலும் தெரிந்து கொள்ள