"வாழ்க்கை என்ற அதிர்ஷ்ட குலுக்கில் நாம் எவ்வாறு பிறக்கிறோம் என்பதையோ,பிறந்த பிறகு வரும் அதிர்ஷ்டங்களையோ துரதிர்ஷ்டங்களையோ நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது ஆனால் அவற்றை எவ்வாறு சமாளிக்கிறோம் என்பது நம் கைகளில் இருக்கிறது. தன்னம்பிக்கை இழக்காமல் முழுமையாக போராடினால் துரதிர்ஷ்டம் நம் பாதையைக் கடந்தாலும் நம்மால் அதனை வெற்றியாக மாற்ற முடியும்". 1994 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 30ந்தேதி உதிர்க்கப்பட்ட வார்த்தைகள் அது. குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியிலேயே விட்டு பின்னர் கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற ஒரு வரலாற்று நாயகர் அந்தக் கெளரவ பட்டத்தை ஏற்றுக்கொண்டு ஆற்றிய உரையில் கூறிய கருத்து அது. சிங்கப்பூரர்களின் ஒட்டு மொத்த நன்மதிப்பையும் பெற்றிருந்த அவர் வேறு யாருமல்ல புன்னகை மட்டுமே பூக்கத் தெரிந்தவரும், நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகித்தும் சராசரி சிங்கப்பூரர்களோடு சரிசமமாக பழகியவரும், சிங்கப்பூரர்களால் 'மக்கள் அதிபர்' என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான சிங்கப்பூரின் முன்னால் அதிபர் டாக்டர் வீ கிம் வீ. மேலும் தெரிந்து கொள்ள